புனித நல் பலியினில் கலந்திடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புனித நல் பலியினில் கலந்திடுவோம்

துணிவுடன் இயேசுவின் வழி நடப்போம் (2)

கூடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம்

பகிர்ந்திடுவோம் என்றும் மகிழ்ந்திடுவோம் (2)


1. உறவிலும் தொடர்பிலும் தூய வழி

தூய்மை அன்பு நமது மொழி (2)

தரணிக்குத் தேவை நீதி வழி

இணைந்தே நடப்போம் நேயவழி - கூடிடுவோம்


2. இமயமும் குமரியும் இணைந்திடவே

இதயம் உறவில் வளர்ந்திடவே (2)

சாதியும் பேதமும் மறைந்திடவே

சாட்சியாய் வாழ்வோம் இயேசு வழி - கூடிடுவோம்