♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மரியன்னைப் புகழ் நாமம் தினம் பாடுவோம்
மனமெல்லாம் மகிழ்ந்தாடக் கொண்டாடுவோம் (2)
இரவென்றும் பகலென்றும் நம் வாழ்விலே
இடர் நின்று துயர் வென்று இனிமை கண்டாள்
அவள் நாமமே தினம் வாழ்கவே நாமெல்லாம் ஒன்றாக
1. அன்பின் தேனருவி அதனில் நானுருகி
அன்னை மரியாளின் புகழ்பாடுவேன்
என்னை இன்றளவும் கண்ணின் இமையெனவே
அன்னை திருநாமம் காப்பாற்றிட
யுகங்களே யுகங்களே வா வா மாதாவைப் பாட
2. அந்த வான் நிலவும் இந்த பூவுலகும்
அன்னை திருநாமம் தினம்பாடுதே
கண்ணில் காணுகின்ற காட்சி யாவிலுமே
கருணை உருவாக அவள் தோன்றிட
யுகங்களே யுகங்களே வா வா மாதாவைப் பாட