இயேசையா இயேசையா எத்தனை நாட்கள் அலைந்து திரிந்து உம்மிடமே சேர்ந்துவிட்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசையா இயேசையா - 4

எத்தனை நாட்கள் அலைந்து திரிந்து

உம்மிடமே சேர்ந்துவிட்டேன்

இயேசு நாயகா எந்தன் இதய தெய்வமே (2)

நீரே என் ஆதாரம் இயேசு நாயகா

நீரே என் ஆகாரம் இயேசு நாயகா

அன்னையைப் போல் நீ என்னை அணைத்திடுவாயே - 2

சேர்ந்துவிட்டேன் உம்மிடமே இயேசு நாயகா


1. தாகமுடன் வாழ்வினிலே உள்ளவரெல்லாம்

என்னிடமே வாருமென்று அழைத்திடும் தேவா (2)

இதயத்திலே வேதனையும் நெஞ்சினிலே சோதனையும் - 2

நீக்கிடவே விரைந்திடுவாய் இயேசு நாயகா


2. வாழ்க்கையிலே வதங்கிவிழும் மானிடர் எல்லாம்

என்னிடமே வாரும் என்று அழைத்திடும் தேவா (2)

மனதினிலே கவலைகளும் உள்ளத்திலே சோகத்தையும் - 2

நீக்கிடவே அருள் புரிவாய் இயேசு நாயகா