உறவை வளர்க்கும் விருந்தாக பிறந்த வானின் அமுதே வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உறவை வளர்க்கும் விருந்தாக

பிறந்த வானின் அமுதே வா


1. செடியைப் பிரிந்த கொடியாக

மடிந்து அழிந்து போகாமல் (2)

இணைந்த கொடியாய் புவியினரை

அணைக்கும் இனிய விருந்தே வா


2. படர்ந்த இருளோ மறைந்து விடும்

பலியால் விருந்தோ தொடர்ந்து வரும் (2)

குருவால் பலியோ தினம் தொடரும்

அருளால் வாழ்வு வளர்ந்து வரும்