சின்னச் சின்னக் கண்ணிலே நின்றாடும் வண்ண வண்ண தீபமே மாதாவே


சின்னச் சின்னக் கண்ணிலே நின்றாடும்

வண்ண வண்ண தீபமே மாதாவே

சொல்லச் சொல்ல நெஞ்சிலே தேனூறும்

சொந்தமென்று வந்தவள் நீதானே

நல்வழி காட்டி வாழ்விலே நம்பிக்கை ஏற்றி நெஞ்சிலே

நன்மைகள் தந்து காத்திடும் தாய் நீயே


1. மாதாக்கோயில் மணியின் ஓசைகள்

மகிமை பேசும் மழலைக் கேளுங்கள்

கண்ணசைவில் ஆயிரம் அன்புமொழிக் காவியம்

புன்னகையில் தோன்றிடும்

வண்ண எழில் ஓவியம் என்நெஞ்சில் பாடல்கள்

அன்பென்னும் ஓடங்கள் - உன்பாத ஓரத்தில் சேராதோ


2. ஏழைப்பிள்ளை உன்னை வேண்டினேன்

கருணை வேண்டிக் கவிதை பாடினேன்

உந்தன் மடிதேடியே என் மனது பாடுது

உன் புகழைச் சொல்லவே இந்தக்குயில் வாழுது

நீ தந்த வாசத்தில் நாள்தோறும் தோட்டத்தில்

சந்தோசம் சங்கீதம் நான்பாட