கடலில் கரையும் நதிபோல் எந்தன் இதயம் உன்னை நாடும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கடலில் கரையும் நதிபோல் எந்தன்

இதயம் உன்னை நாடும் (2)

இயேசுவில் இணைந்துவிட்டேன் எந்தன் வாழ்க்கை முழுவதுமே


1. மரங்கள் அசைந்து பாடிடுதே உன்னைப் போற்றிடவா

மலர்கள் மலர்ந்து சிரித்திடுதே உன்னைப் புகழ்ந்திடவா

இயற்கை எல்லாம் உந்தன் தரிசனம்

என்றும் ஆனந்தமே என்னில் ஆனந்தமே


2. புதிய உலகம் தோன்றிடவே நீயும் வந்தாயோ

மனித இனத்தைக் காத்திடவே உம்மைத் தந்தாயோ

உலகம் எங்கும் உந்தன் அருளே

எம்மை மீட்டிடுதே உம்மிடம் அழைத்திடுதே