என் தேவனே இறைவனே என் இனிய நேசனே என் அன்பனே நண்பனே இதயம் வாருமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் தேவனே இறைவனே என் இனிய நேசனே

என் அன்பனே நண்பனே இதயம் வாருமே (2)

வா வா விரைந்து வா என்னில் வா எழுந்துவா


1. தண்ணீர் கண்ட மானைப் போல் தாவி நானும் வருகின்றேன் -2

ஆன்ம தாகம் தீரவே அள்ளிப் பருக விழைகின்றேன்

வா வா விரைந்து வா என்னில்வா எழுந்துவா


2. வருக தேவா வருகவே வாழ்வை எமக்குத் தருகவே -2

உம்மில் என்றும் வாழவே உமது அருளைப் பொழிகவே

வா வா விரைந்து வா என்னில்வா எழுந்துவா