அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே


அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும் ஜீவ தயாபரனே

அருள் ஏராளம் அருள் அவசியமே

அற்பமாய் சொற்பமாய் அல்ல

திரளாய் பெய்யட்டுமே


1. அருள் ஏராளமாய் பெய்யும்

மீண்டும் உயிர்ப்பித்திடும்

மேடு பள்ளங்களின் மேலும்

கேள் மாமழையின் சத்தம்


2. அருள் ஏராளமாய் பெய்யும்

எம் மேல் அனுப்பும் கர்த்தா

உம் வாக்கை எண்ணி நீர் எம்மை

இப்போ உயிர்ப்பித்திடும்


3. அருள் ஏராளமாய் பெய்யும்

இன்றே பெய்திட்டால் நலம்

பாவ அறிக்கை செய்கிறோம்

இயேசுவின் நாமத்திலே