கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும் கிறிஸ்துவின் தேகமே என்னை இரட்சியும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும்

கிறிஸ்துவின் தேகமே என்னை இரட்சியும்

கிறிஸ்துவின் இரத்தமே என்னைப் பூர்ப்பியும்

திருவிலாத் தீர்த்தமே என்னைத் தூய்ப்பியும்


1. கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட

அருள்நிறை இயேசுவே என்னைக் கேட்டிடும்

அரிய காயங்களுள் என்னை வைத்திடும்

பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும்


2. பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும்

மரண வேளையினில் என்னைக் கூப்பிடும்

பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே

வருகவென்றன்போடு என்னை ஏவிடும்