புனித அடிமைத்தனம்.. தேவ மாதா வழியாக ஆண்டவர் இயேசுவுக்கு அடிமையாதல்.. இதுவே புனித அடிமைத்தனம்..

அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய “ அன்னை மாமரியாளுக்கு முழு அர்ப்பண தயாரிப்பு “. மொத்தம் 33 நாட்கள் செய்ய வேண்டியது.

இந்த அர்ப்பணம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.. நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இதில், ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்டுள்ள ஜெபத்தியானங்கள், வாசகங்கள், மன்றாட்டுக்கள் முதலில் உலக ஆசைகளில் இருந்து நாம் விடுபடவும், நம்மை நாமே உணர்ந்து கொள்ளவும், மாதாவை சரியாக அறிந்து கொள்ளவும் கடைசியாக நமது மீட்பரை முழுமையாக அறிந்து கொள்ளவும் உதவி செய்யும்.

இதன் வாயிலாக நாம் நம்மை மாதாவுக்கு அடிமைப்படுத்தி அவர்களின் உதவியோடு, வழிநடத்தலோடு கடவுளுக்கு நம்மை அடிமைப்படுத்துவதை நோக்கி நகரும்..

( இதுவே புனித லூயிஸ் கடைப்பிடித்த உண்மையான மாதா பக்தி)

தேவமாதா வழியாக.. ஆண்டவர் இயேசுவுக்கு அடிமையாதல் என்பது நமக்கும், நம் ஆன்மாவுக்கும் பாதுகாப்பு அளிக்கும் மிக புனித அடிமைத்தனமாகும்..

இந்த 33 நாட்களுக்கான ஜெபங்கள் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.. விசுவாச பிரகடனம் உண்டு, மாதா ஜெபங்கள் உண்டு, நற்செய்தி வாசகங்கள் உண்டு, கிறிஸ்து நாதர் அநுசார வாசகங்கள் உண்டு, மரியாயின் மீது உண்மைபக்தி வாசகங்கள் உண்டு. பரிசுத்த ஆவியானவர், தேவமாதா, இயேசுவின் திருநாம பிராத்தனைகள் உண்டு.

மிக பயனுள்ள ஜெபங்கள், அர்த்தமுள்ள வாசகங்கள், தந்திர சோதனைகள் என்றால் என்ன ? அது ஏன் வருகிறது? அதை எப்படி எதிர்கொள்வது? என்று பல பயனுள்ள வாசகங்கள் உள்ளன. குறிப்பாக நம் ஆன்மாவை கடவுளுக்கு உகந்த முறையில் தயாரிக்க உதவும்..

இந்த அடிமைத்தனத்தை செய்வதற்கு வருடத்தில் நான்கு கால அட்டவனை அப்புதகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நாட்களும் செய்யலாம் அது போக நம் சோதனை காலத்திலும் இவ்வர்ப்பணத்தை செய்யலாம்..

இப்போது ஒரு கால அட்டவணை இருக்கிறது அதாவது ஜூலை 13-ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 15-ல் முடியும்..

ஆக இந்த புனிதமிக்க அர்ப்பணத்தை செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் புத்தகத்தை கூரியரில் அனுப்பி வைப்பார்கள்..

மாதா அப்போஸ்தலர்சபை சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபிரியேல் Ph.no. 9487257479.

இந்த அர்ப்பணத்திற்கு மூன்று நாட்களே இருப்பதால் உங்களுக்கு புத்தகம் கைக்கு கிடைக்கும் வரை.. 33 நாட்கள் அர்ப்பண வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளலாம். வாட்சப் குழுவிற்கு சகோ. கிறிஸ்டோபர் மற்றும் சகோ.ஜேசுராஜை தொடர்பு கொள்க..

குறிப்பு : முடிந்த வரை “ அர்ப்பண புத்தகத்தை வாங்கி “ அதை அர்ப்பணத்திற்கு பயன்படுத்துங்கள்.. அதுவரை வாட்ஸ் அப். குழுவில் இணைந்து ஜெபங்களை ஜெபியுங்கள்.

இந்த சோதனையான காலகட்டத்தில் இந்த புனித அடிமைத்தனம் மிகவும் அவசிய தேவை.. எதிரியிடமிருந்து நம்மைப் பிரித்து ஆண்டவர் இயேசுவோடு நம்மை இணைக்கும். தேவமாதாவின் அளப்பரிய பாதுகாப்பை நமக்கு பெற்றுத்தரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !