♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மனமென்னும் பொன்தட்டில் இறைவா - எம்
காணிக்கை தந்திட்டோம் ஏற்பாய் (2)
1. புகைபோல மறைகின்ற வாழ்வில் - வெறும்
புகழ்தேடிப் பயனேதும் இல்லை (2) தூபப்
புகைபோல உயர்ந்து நாங்கள் - என்றும்
புனிதராய் வாழ்ந்திட அருள்வாய்
2. அழகோடு இருந்தாலும் பிள்ளை - அது
அழுக்கோடு இருந்தாலும் பிள்ளை (2) என்றும்
பழச்சாற்றில் கலக்கின்ற நீர்போல் - இன்று
பாவியை அணைக்கின்ற உமக்கு