♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தருவேன் தருவேன் காணிக்கையாய்
மனநிறைவுடன் தருவேன் காணிக்கையாய் (2)
என்னையே தருவேன் ஏற்றிடுவாய் - புவி
மகிழ்ந்திட மலர்ந்திட்ட மன்னவனே (2)
1. இதயத்தின் உணர்வினை இசையென வடித்து
உன்பதம் படைத்தேன் ஏற்றிடுவாய்
இமைகளின் விளிம்பினில் ஆனந்தத் துளிகள்
நன்றியின் பலியாய் ஏற்றிடுவாய்
ஒளியான உன்னில் நானும் உறவோடு என்றும் வாழ
உலகிற்கு ஒளியாக மலரச் செய்வாய் (2)
இதுவே வாழ்வின் காணிக்கை இதுவே நிரந்தர காணிக்கை -2
2. மலர்களின் மணமுடன் மகரந்தத் தேன்துளி
இயற்கையின் எழிலினைக் கொண்டு வந்தேன்
கோதுமை திராட்சைக் கனிகளின் தியாகப்
பலிப்பொருளாய் எனைத் தரவந்தேன்
நிலையான பலி உன்னில் ஒன்றாகக் கலந்திட
பலிப்பீடம் வருகின்றேன் ஏற்றிடுவாய் (2) - இதுவே வாழ்வின்...