உனக்காக இனிவாழ முடிவெடுத்தேன் ஒரு கோடி இடர்பாடு எதிர் வந்தபோதும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உனக்காக இனிவாழ முடிவெடுத்தேன்

ஒரு கோடி இடர்பாடு எதிர் வந்தபோதும் (2)

எனக்காக வாழ்ந்ததெல்லாம் பொய் வாழ்வு 2

என்பதை உன் அருளாலே உணர்ந்ததனால் - நான்


1. வாழ்வும் வழியும் ஒளியும் ஆனவர்

மாறாத அன்பும் இரக்கமும் உடையவர்

இறைமகன் இயேசுவே என் வாழ்வின் மையம் - 2

என்றே ஏற்றிட முடிவெடுத்தேன்


2. தீமைகள் பாவங்கள் விலக்கிடவும்

தெய்வீக அன்பினை உணர்ந்திடவும்

இறைவனில் இரண்டறக் கலந்திடவும் - 2

இதயத்தின் ஆழத்தில் முடிவெடுத்தேன்