ஏழை இதயம் தேடி வந்த தெய்வ மகனே தாலேலோ உண்மை வேதம் உரைக்கப் பிறந்த

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஏழை இதயம் தேடி வந்த தெய்வ மகனே தாலேலோ

உண்மை வேதம் உரைக்கப் பிறந்த

அன்பின் வடிவே தாலேலோ தாலேலோ தாலேலோ


1. இதயதீபம் ஏற்றி வைத்து

இரவு பகலாய் ஏங்கி நின்றேன்

மழலை இதயம் பேசும் மொழியை

மகிழ்ந்து கேட்கக் காத்திருந்தேன்

வீதி வாழ்வாம் எந்தன் வாழ்வை

மீட்பின் வேள்வியாய் மாற்ற வந்தாயோ


2. வேஷம் சூழ்ச்சிகள் இருக்கும் வரையில்

பாசம் வாழ்வில் வீசுமோ

உலக வாழ்வே பொய்மை என்றால்

உண்மை உலகில் பேசுமோ

நீதி தேவனாய் என்னில் பிறந்து

மீட்பின் வேள்வியாய் மாற்ற வந்தாயோ