உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்

உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)

உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட

உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் - 4


1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்

பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் - 2

மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்

மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள்

நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்

உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்

எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2


2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் - 2

காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் - 2

விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்

கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்

நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்

நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்

எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2