ஜீவ கானங்கள் நான் பாடுவேன் அதில் எந்தன் உயிரை இசையாக மாற்றி உந்தன் பாதம் கீதம் நான் பாடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஜீவ கானங்கள் நான் பாடுவேன் அதில்

எந்தன் உயிரை இசையாக மாற்றி

உந்தன் பாதம் கீதம் நான் பாடுவேன்


1. ஓராயிரம் பூ பூத்ததில் என்னைத் தேர்ந்தெடுத்தாய்

நூறாயிரம் குறையிருந்தும் என்னையும் ஏன் அழைத்தாய்

தகுதியானதால் அழைக்கவில்லை அழைத்ததால் தகுதிபெற்றேன்

உன்னைப்போல் மாறச்செய்வாய் - 2


2. உன் வார்த்தைகள் என் வாழ்விலே அர்த்தங்கள் தருகின்றன

உன் வாழ்வினில் கண்ட கனவுகளை நிறைவேற்ற அழைத்தாயோ

உந்தன் வார்த்தை உயிருள்ளது

ஆற்றல் அனைத்தும் கொண்டுள்ளது

என்னில் நிறைவு செய்வாய் என்னில் நீ நிறைவு செய்வாய்