ஜீவன் தேடும் தெய்வம் இன்று என்னில் வருகின்றார்
கானம் பாடும் நேரம் எந்தன் உயிரில் இணைகின்றார்
தெய்வமே உன்னைத் தேடினேன் என்னில் உறைந்திட வா
ஆன்ம தாகம் உந்தன் வேதம் என்னைக் காத்திட வா
1. பாதையெங்கும் தீபம் ஏற்றி நிழலாய் தொடர்கின்ற நேரம்
மௌனமொழியால் அன்பைச் சுமந்து முகிலாய் வருகின்ற காலம்
இயேசுவே என் தெய்வமே புதுவாழ்வின் வசந்தமே - ஆன்ம ...
2. பூமியெங்கும் பூக்கள் தூவி புனிதம் காண்கின்ற இதயம்
பாச விழியால் உன்னைத் தேடி உறவினில் வளர்கின்ற உதயம்