ஆவியைத் தாரும் இயேசுவே - தூய ஆவியைத் தாரும் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆவியைத் தாரும் இயேசுவே - தூய

ஆவியைத் தாரும் இயேசுவே


1. புத்துயிர் பெற்று நான் வாழ

புதுப் படைப்பாய் நான் மாற


2. எந்தன் தாகத்தைக் தீர்க்க

உயிருள்ள நீர் என்னில் சுரக்க


3. பாவக் கறைகளைக் கழுவ

பாவத் தளைகளை அறுக்க


4. மனத்தின் கவலையைப் போக்க

மகிழ்ச்சியால் எம்மை நிரப்ப


5. சாத்தானின் சேனையை வெல்ல

உமது புகழை நான் சொல்ல