கையில் திவ்ய நற்கருணையா? கொடுப்போரும், எடுப்போரும் நாத்திகரே!

( உண்மை சில நேரங்களில் சுடும், சில நேரங்களில் கசக்கும், சில நேரங்களில் மிக கடினமாயிருப்பது போல தோன்றும்.. ஆனால் உண்மை உண்மைதானே.. நம் ஆண்டவர் இயேசு உண்மையை சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்கியதில்லை.. யாருக்கும் முகத்தாட்சண்யம் பார்த்ததில்லை..)

கையில் நன்மை கொடுப்பது பற்றிய சில கேள்வி பதில்கள்..

கையில் நன்மை ஏன் எதிர்க்கப்படுகிறது ?

குருவானவர் கடவுளுக்கும் மனிதருக்குமிடையே கடவுளால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தராக இருக்கிறார். ஆகவே, மனிதரின் காணிக்கைகளைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது எப்படி அவருக்கு உரியதாக இருக்கிறதோ, அப்படியே மக்களுக்கு திவ்ய நன்மை வழங்குவதும் அவரைச் சார்ந்ததாக இருக்கிறது.. மகா பரிசுத்த தேவ நற்கருணையின் மீது கொள்ள வேண்டிய ஆராதனை வணக்கத்தின் காரணமாக, அபிஷேகம் செய்யப்படாத எதுவும் அதைத் தொடுவது பெரும் அவசங்கையாக இருக்கிறது. எனவே திருமேனித் துகிலும் (corporal), பூசைப் பாத்திரமும் மந்திரிக்கப்பட்டவை என்பதால் அவையும், அபிஷேகம் செய்யப்பட்டவை என்பதால் குருவானவரின் கரங்கள் மட்டுமே திவ்ய நற்கருணையைத் தொடலாம். இதன் காரணமாக அதைத் தொடுவது திருச்சட்டத்திற்கு விரோதமானது ஆகும் என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார் (SummaTheologica, 111, Q,82, Art, 13).

திவ்ய நன்மையின் ஒவ்வொரு சிறு துணுக்கிலும் மனுக்குலத்தின் பாவங்களுக்காகப் பலியாகி மரித்து, உயிர்த்து, நமக்காக மோட்சத்தில் தமது பிதாவுக்கு முன் மனுப்பேசிக் கொண்டிருக்கும் சேசு முழுமையாக, தமது ஆத்தும சரீரத்தோடும், தேவ சுபாவத்தோடும் இருக்கிறார் என்பது கத்தோலிக்க விசுவாசம், கையில் நன்மை வாங்கும் போது, சில துணுக்குகள் கையில் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. நன்மை வாங்குபவர்கள் கையை உதறி, துணியில் துடைத்து அப்புறப்படுத்தும் போது, மேற்படி விசுவாச அடிப்படையை அவர்கள் மறக்கவும் மறுக்கவும் ஆண்டவரை அவசங்கை செய்யவும் நேரிடுகிறது. இந்தக் காரணங்களால்தான் கையில் நன்மை எதிர்க்கப்படுகிறது..

திரிதெந்தீன் (லத்தின்) திவ்ய பலிபூசையில் மேற்படி துணுக்குகள் பாத்திரங்களுக்குள்ளும், பீடத்தில் விரிக்கப்படும் திருமேனித் துகிலிலும் (Greek Corporal) ஒட்டி இருக்கும் என்பதால் அவற்றை மிகக் கவனமாக சேகரித்து, பூசைப் பாத்திரத்தில் இட்டு, முதலில் திராட்சை இரசமும், அதன்பின் தண்ணீரும் ஊற்றிக் கவனமாகக் கழுவி குருவானவர் பருக வேண்டும் என்ற மிகக் கண்டிப்பான ஒழுங்குகள் இருந்தன. நன்மை கொடுக்கும்போது, அது தவறிக் கீழே விழுந்து விட்டால், குருவானவர் மட்டும் அதை மிகுந்த சங்கை மரியாதையோடு எடுத்துப் பாத்திரத்தில் இட்டபின், அது விழுந்திருந்த இடத்தை ஈரத் துணியால் துடைத்துக் கழுவும் பழக்கம் இருந்தது. படிப்படியாக வந்த பல தாறுமாறான மாற்றங்களின் காரணமாக இந்த ஒழுங்குகளும் பழக்கங்களும் குருக்களால் கைவிடப்பட்டன. இன்று திவ்ய அப்பத் துணுக்குசுளைக் குருக்களும் கூட ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்களால் பயிற்றுவிக்கப்படும் துறவியரும் விசுவாசிகளும் கூட அதை அலட்சியம் செய்து வருகிறார்கள். நற்கருணையைப் பழிக்கும் இது போன்ற துரோகங்களுக்கு நாம் கட்டாயம் நிந்தைப் பரிகாரம் செய்யதுதான் வேண்டும்.

நன்றி : மாதா பரிகார மலர்.

சிந்தனைகள் :

1. நமக்கு நோய் தீர கடவுளையே நாடுகிறோம். அதுவும் மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையிலும் கடவுளையே நாடுகிறோம்.. தேடுகிறோம்.. அந்த கடவுளை நோய்களை பரப்புவார், கடத்துவார் என்றால் நாம் நோய் தீர கடவுளை நாடக்கூடாது, வேண்டக்கூடாது.

அப்படியே கேட்டால் நம்மைப் பார்த்து நன்றாக ஒரு கேள்வி கேட்ப்பார்.. என்ன கேள்வி என்று சொல்லத்தேவையில்லை..

2. அதே போல் இப்படி விசுவாசம் இல்லாதவர்கள். இனி ஆண்டவரை வைத்துக் கொண்டு அற்புத சுகமளிக்கும் கூட்டத்தை நடத்தமாட்டார்கள்.. அடிப்படை விசுவாசம், அடித்தள (foundation) விசுவாசத்திலேயே கை வைத்த பின்பு எந்த அடிப்படையில் இவர்கள் கூட்டம் நடத்துவார்கள். நடத்தினாலும் அதை நம்பி யார்தான் போவார்கள்..???

3. விசுவாசம் கெட்டவர்களிடமிருந்து கடவுளுக்கு விடுதலை..

I) நோய் தீர யாரும் பெட்டிசன் போட முடியாது..

2) இவர்கள் அடுத்தவர்கள் நோய் தீரவும் பெட்டிசன் போட முடியாது..

3) வேறு எந்த பெட்டிசனும் போட முடியாது..

உனக்குத்தான் விசுவாசம் இல்லையே, நீ எந்த முகத்தை வைத்து என்னிடம் கேட்க வந்தாய்.. என்று கேட்பாரே..

விசுவாசம் இல்லாதவர்களிடம் " உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று " என்று சொல்லி ஆண்டவர் எப்படி ஆண்டவர் சுகம் கொடுப்பார் ??

இந்த பகுதி விசுவாசம் உள்ள ஆத்திகர்களுக்கு மட்டும்...

1. நமக்கு ஆண்டவரை ஊட்டி விடுவதாக இருந்தால் அதாவது நாவில் கொடுத்தால் பக்தியோடும், தகுந்த தயாரிப்போடும் முழங்காலில் நின்று நம் கடவுளை வாங்குவோம்..

2. நாவில் தரவில்லையா? நாம் ஆசை நன்மை மட்டும் வாங்குவோம்.. நம்மேலும், நம் விசுவாசத்தின் மேலும் அன்பும், மதிப்பும் கொண்ட நம் கடவுள் அதே பலனை நமக்கு தருவார்.

3.நாம் நம் விசுவாசத்தையும் காத்துக் கொண்டோம்.. நாளைக்கு நமக்கு என்ன தேவை என்றாலும் நம்பிக்கையோடு அவரிடம் கேட்கலாம்.. அவரும் தாராளமாக தருவார்.. நோய்களை குணமாக்குவதிலிருந்து எல்லாமே நம்மால் கேட்கவும் முடியும்.. பெறவும் முடியும்..

பரிகாரம் எப்படி செய்வது..

1. நம் விசுவாசத்தைக் காத்துக்கொண்டு ஆசை நன்மை வாங்குவது..

2. நம்மால் முடிந்த ஜெப, தவ, பரிகாரங்களை செய்வது..

அதிகமாக ஜெபிப்போம்.. நம் விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம்..

" தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்து விடுவான் " - மத்தேயு 16 : 25

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!