" நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு " திவ்ய நற்கருணை தியாலஜி. அருளப்பர்(யோவான்) நற்செய்தி 6-ம் அதிகாரம்..

35 : அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது.

41: "வானினின்று இறங்கிவந்த உணவு நானே"

48 : நானே உயிர் தரும் உணவு.ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது.

51 : நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

53 : இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்:

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது.

54 : என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

55 : என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.

56 : என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.

57 : உயிருள்ள தந்தை என்னை அனுப்பினார், நானும் அவரால் வாழ்கின்றேன். அதுபோல் என்னைத் தின்பவனும் என்னால் வாழ்வான்.

58 : வானினின்று இறங்கிவந்த உணவு இதுவே: இது நம் முன்னோர் உண்ட உணவுபோல் அன்று: அவர்களோ இறந்தார்கள்: இவ்வுணவைத் தின்பவனோ என்றுமே வாழ்வான்."

ஆண்டவராகிய இயேசு திவ்ய நற்கருணை பற்றி பத்து முறை உரக்க அறிவிக்கிறார்..

அதை விசுவசித்து நம் ஆண்டவரை தகுதியான உள்ளத்தோடும், தகுந்த தயாரிப்போடும் முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்..

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!