♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நிறைவாழ்வை நோக்கி திருப்பயணம்
பாருலகில் செல்லுவோம் - அருள் வாழ்வு தரும்
வார்த்தைகளால் நன்மைகளை நாம் செய்வோம் (2)
செல்வோம் விரைந்து செல்வோம்
நிறை வாழ்வை நோக்கியே செல்வோம்
செய்வோம் விரைந்து செய்வோம்
இனி புதியதோர் உலகினை செய்வோம்
1. சுமை சுமக்கும் தோள்களுக்கு வலிமையினை ஊட்டுவோம்
சுகம் மறந்த மாந்தருக்கு வளமையினைக் காட்டுவோம் (2)
இரு கரங்கள் விரித்திங்கு வாடுவோரைத் தேற்றுவோம் - 2
இறையரசின் கனவுகளை நாடுதோறும் சாற்றுவோம்
2. பரிவிரக்கம் சாந்தம் அன்பு பொறுமை கொள்ளுவோம்
மகிழ்ச்சியிலும் அமைதியாக அடக்கமுடன் வாழுவோம் (2)
விசுவாசம் நன்னயமும் கேடயமாய்த் தாங்கியே - 2
புது இனமாய் புதுயுகமாய் வாழ்வு நோக்கி செல்லுவோம்