என் வாழ்வின் பொருள்தனை என் இயேசு கரங்களில் தந்தேன் நற்பலி எனவே


என் வாழ்வின் பொருள்தனை என் இயேசு கரங்களில்

தந்தேன் நற்பலி எனவே

கல்வாரிப் பொருளெனக் கொள்வாய் நீ இவைகளை

உன் நாமம் போற்றிடுவேன்

தந்தாய் நீ ஏற்றிடுவாய் என் வாழ்வை மாற்றிடுவாய் - 2


1. பொன்னோடு பூவும் என் வாழ்வு யாவும்

எல்லாமும் உமதருளே (2)

மண்மீது யான் தர வேறு பொருளேது

என் பாவச் சுமையதுவே (2)

தேவன்பத மலர்களில் ஏழை இரு விழிகளின் நீரை உமக்களித்திடுவேன்


2. என் ஆன்மராகம் உம் நாமம் பாடும்

பொன் தூய நறுமணமே (2)

என் பாதம் வேர்வையில் நீந்தும் நிலையிலும்

உன் பாதை நடந்திடுமே (2)

தேவன் தரும் இன்பங்களை வாழ்வில் வரும் துன்பங்களை

நாளும் உமக்களித்திடுவேன்