புதிய ஆண்டு வருக புனித ஆசீர் தருக புதிய உறவுகள் மலர்ந்திடவே பழைய தவறுகள் கழிந்திடவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதிய ஆண்டு வருக புனித ஆசீர் தருக

புதிய உறவுகள் மலர்ந்திடவே பழைய தவறுகள் கழிந்திடவே


1. வேலை வாய்ப்பு பெருகிடவே புதிய ஆண்டு வருக

வேளைதோறும் உணவு கிடைக்க புனித ஆசீர் தருக

குறைபவனுக்கே வேணும் தேவையான வசதிகளும்

அனைவரும் பெற்று மகிழ


2. சமநீதி கிடைத்திடவே புதிய ஆண்டு வருக

சகோதரராய் வாழ்ந்திடவே புனித ஆசீர் தருக

சாதி சமய கலவரம் கொலை கொள்ளை பயங்கரம்

தீயவைகள் யாவும் ஒழிய