காணிக்கையாய் எனைக் கொணர்ந்தேன் ஏற்பாய் தேவா எனை ஏற்பாய் தேவா கள்ளமில்லா மனம் கொணர்ந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கையாய் எனைக் கொணர்ந்தேன்

ஏற்பாய் தேவா எனை ஏற்பாய் தேவா

கள்ளமில்லா மனம் கொணர்ந்தேன்

ஏற்பாய் தேவா இதை ஏற்பாய் தேவா

கரம் நீட்டி எனைத் தூக்கி உனதாக்க வேண்டும்

ஏற்றுக் கொண்ட என் வாழ்வில் மாற்றம் தர வேண்டும் (2)


1. தினம் தினமும் வழிநடத்தி எனைக் காக்கின்றாய்

சோகம் வந்து சூழும் போது எனைத் தேற்றினாய் (2)

தனிமை வந்து வாட்டும்போதென் கரம் பற்றினாய் - 2

தந்தேன் என்னை நன்றிப் பலியாய் ஏற்பாய்


2. உணர்வையெல்லாம் செயலையெல்லாம் பலியாக்குவேன்

உறவையெல்லாம் முறிவையெல்லாம் உனதாக்குவேன் (2)

அப்பமாக ரசமாக நான் மாறுவேன் - 2

தந்தேன் என்னை நன்றிப் பலியாய் ஏற்பாய்