நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம்

நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2)

அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் - 2

அன்னையாய் தந்தையாய்

அருகில் இருந்து அணைக்கும் தேவனை


1. கோடி துன்பம் வந்த போதும்

கொடிய நோயில் வீழ்ந்த போதும்

தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2)

வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் - அன்னையாய்...


2. உலகம் நம்மை வெறுத்த போதும்

கலகம் நம்மைச் சூழ்ந்த போதும்

விலகவில்லை அன்பர் இயேசுவே (2)

நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் -அன்னையாய்..