நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் நெஞ்சார ஆண்டவர்க்கு நன்றி சொல்லுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்

நெஞ்சார ஆண்டவர்க்கு நன்றி சொல்லுவேன் (என்) - 2


1. ஆண்டவர் அன்பும் அருளும் உள்ளவர்

சினம் கொள்ள என்றுமே தாமதிப்பவர்

அவரது இரக்கம் என்றும் உள்ளது

அவருக்கு நன்றி நாளும் சொல்லிடுவேன்


2. ஆண்டவரின் செயல்கள் என்றும் உயர்ந்தவையே

நேர்மையும் மகத்துவமும் உள்ளவையே

அவருக்கு அஞ்சுவோருக்கு அருள் அளிக்கின்றார்

அவருக்கு நன்றி நாளும் சொல்லிடுவேன்