பொங்கும் கருணையே உந்தன் நெஞ்சமே எங்கள் வேண்டுதல் உந்தன் தஞ்சமே


பொங்கும் கருணையே உந்தன் நெஞ்சமே

எங்கள் வேண்டுதல் உந்தன் தஞ்சமே


1. எமது வழிகளை செம்மைப்படுத்துவீர்

எமது குறைகளை நிறைகளாக்குவீர்


2. ஆயர்கள் குருக்களை ஆசீர்வதித்திடுவீர்

அவரின் பணிகளைப் புனிதமாக்குவீர்


3. நாடாளும் தலைவர்தம் கடமை உணர்த்துவீர்

பாராமுகம் காட்டாத பண்புதனை வளர்ப்பீர்


4. எம்மவர் தொழில்களை வளமையாக்குவீர்

புனிதர் வழிதனில் நடந்திடச் செய்குவீர்


5. கிறிஸ்தவம் தழைத்திட தீயன களைந்திடுவீர்

உண்மை இறைவனை உணர்ந்திடச் செய்குவீர்