நன்றி கூறுவேன் நல்ல தேவனே நீ செய்த செயல்களுக்காய் நன்றி கூறுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி கூறுவேன் நல்ல தேவனே - 2

நீ செய்த செயல்களுக்காய் நன்றி கூறுவேன் -2

நன்றி என்றும் நன்றி -4


1. ஆற்றலை நீ தந்தாய் ஆளுமை நீ தந்தாய்

ஆன்றோனாய் வாழ நீ ஆன்ம நலம் தந்தாய் (2)

துன்ப நேரம் தேடிவந்து கரம்பிடித்து நின்றாய் -2

சோதனைகள் வேதனைகள் நீக்கி மகிழ்ச்சி தந்தாய் -2

நன்றி என்றும் நன்றி -4


2. அன்பினை நீ தந்தாய் அருளினை நீ தந்தாய்

அன்புடனே வாழ நீ வழிமுறைகள் தந்தாய் (2)

தேவையறிந்து தேடிவந்து தியாகமழை பொழிந்தாய் -2

இல்லாமை இல்லாத வாழ்வினை நீ தந்தாய் -2

நன்றி என்றும் நன்றி -4