இறைவனின் தாயே இதயத்தில் நீயே வாழ்த்துகள் பாடுவோம் உந்தன் பாதம் சேருவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனின் தாயே இதயத்தில் நீயே

வாழ்த்துகள் பாடுவோம் உந்தன் பாதம் சேருவோம்

உந்தன் நாமம் போற்றுவோம் (2)


1. அருள் நிறை மரியே மாமரியே

அருள்தனைப் பொழிவாய் ராக்கினியே

புதுமைகள் புரிந்திடும் தூயவளே

புவிக்கெல்லாம் அன்னையாய்த் திகழ்பவளே

உந்தன் பாதம் நாடிவந்தோம் உம்மை என்றும் தேடிவந்தோம் -2

திருமகன் தாய்மரியே என்றென்றும் நீ மங்கையர் குலவிளக்கே 2


2. நீதியும் நேர்மையும் நிறைந்தவளே

இறையருள் எமக்காய் வேண்டுமம்மா

தேவைகள் யாவையும் தருபவளே

வேண்டிய வரங்களைத் தாருமே

உந்தன் பாதம் நாடிவந்தோம் உம்மை என்றும் தேடிவந்தோம் -2

தேவதாய் நீயே அன்பின் துhய தாய் நீயே

பாடுவோம் பாடுவோம் உம்மை வாழ்த்திப் பாடுவோம் (2)