என்னுள்ளம் தேடுதே உன் அன்பை நாடுதே உன்னைக் காணத் துடிக்கின்றதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னுள்ளம் தேடுதே உன் அன்பை நாடுதே

உன்னைக் காணத் துடிக்கின்றதே (2)


1. அன்பின் சுவை உணரவில்லை பழகிடும் மனிதரிடம் -2

உணவாய் நீயிருக்க சுவையிங்கு வேறேது -2


2. என் தாகம் தணியவில்லை பருகிடும் சுனை எதிலும் -2

பானமாய் நீயிருக்க தாகங்கள் இனியேது -2