இன்று விடியல்கள் தேடி புறப்படுவோம் நம் விடிவெள்ளி இயேசுவின் பாதையிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இன்று விடியல்கள் தேடி புறப்படுவோம்

நம் விடிவெள்ளி இயேசுவின் பாதையிலே

புது சரித்திரங்கள் நாம் தோற்றுவிப்போம் - 2

உயர் தலைவன் இயேசு நம்மை அழைக்கின்றார்


1. வாழ்வின் விரையங்களை வழிதேடும் பாதைகளாய்

வர்ண பேதங்களை விரட்டிடும் விளக்குகளாய் (2)

சிறைப்பட்ட நெஞ்சங்களை சுதந்திரப் பறவைகளாய்

மாற்றிட நம் இயேசுவே புதுப்பாதைகள் அமைத்தார்


2. மாந்தர் உணர்வுகளை மதித்திடும் பண்பினையும்

பழிக்கும் சுற்றங்களை மன்னிக்கும் பெருமனமும் (2)

இருளினைத் தூற்றாமல் ஒளியினை ஏற்றிடவும்

இயேசுவே வழி காட்டினார் அந்தப் பாதையில் உயர்வோம்