விடியலைத் தேடி வருகின்றேன் உன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விடியலைத் தேடி வருகின்றேன் உன்

வார்த்தையை எந்தன் வாழ்வாக்கவே இறைவா (2)


1. நிலையானது என்றும் நிலையானது

உன் வார்த்தைகள் என்றும் நிலையானது

குறையாதது சற்றும் குறையாதது அதில்

உறைந்திடும் அன்பு குறையாதது

இங்கு உயிர் வாழ்கிறேன் உம்மில் நிறைவாகவே 2

உந்தன் பணிவாழ்வை முழுதாக நிறைவேற்றவே - இன்று


2. சிந்தையிலே உந்தன் சொந்தங்களே

என்றும் ஓயாத அலையாக எழுகின்றதே

மந்தையின் ஆயனே என் இயேசுவே எந்தன் நெஞ்சமே

உமைக்காணவே விழைகின்றதே

நித்தம் கவி பாடுமே நாதா உமக்காகவே 2

உந்தன் இனிதான கனவினை நனவாக்கவே - இன்று