இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றி பாடுவோம் இதயம் மகிழும் நாளிதே நன்றி நன்றி பாடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றி பாடுவோம்

இதயம் மகிழும் நாளிதே நன்றி நன்றி பாடுவோம்

நன்றி இறைவா - 4 -2


1. வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்

வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் (2)

இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் பாடட்டும் - 2

இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால்

நன்றி இறைவா 4 -2


2. கவலை யாவும் மறைந்தது கலக்கமில்லையே

காலமெல்லாம் கர்த்தர் இயேசு நம்மோடு உள்ளார் (2)

புதிய வானம் புதிய பூமி பூத்திட - 2

புதிய பயணம் புவியில் இன்று தொடங்குவோம்

நன்றி இறைவா - 4 -2