யார் உன்னைக் கைவிட்ட போதும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


யார் உன்னைக் கைவிட்ட போதும்

நான் உன்னைக் கைவிடமாட்டேன் - அஞ்சாதே 8 (2)


1. நோயினால் உள்ளம் சோர்ந்திடும்போது

மகளே பதறாதே - மகனே பதறாதே - 2

கடன் தொல்லை உன்னைச் சூழ்ந்திடும்போது

மகளே கலங்காதே - மகனே கலங்காதே - 2

காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்


2. உழைத்தும் உயர்வு இல்லாதிருந்தால்

மகளே பதறாதே-மகனே பதறாதே

உலகமே உன்னை ஒதுக்கிடும்போது

மகளே கலங்காதே-மகனேகலங்காதே

காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்