அப்பத்தில் வாழும் தெய்வமே அன்பின் அவதாரமே ஆன்மாவின் உணவும் நீரே ஆராதனை உமக்கே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அப்பத்தில் வாழும் தெய்வமே அன்பின் அவதாரமே

ஆன்மாவின் உணவும் நீரே ஆராதனை உமக்கே (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2


1. அழியும் உணவைத் தேடவேண்டாம்

அழியா உணவு நான் என்றீர்

தாகம் தணிக்கும் தண்ணீர் வேண்டாம்

தாகமே இனி இல்லை என்றீர்

பாவி எனக்கு உணவானீர்

பாவம் போக்க மனுவானீர் (2)

மனிதம் வளர்க்க மகிமை சேர்க்க

கரம் தந்தீர் கரை சேர்ப்பீர் - ஆராதனை ஆராதனை...


2. கவலை வேண்டாம் கண்ணீர் வேண்டாம்

வாழ்வும் வழியும் நானென்றீர்

பிரிவு வேண்டாம் பிணக்கு வேண்டாம்

இணைக்கும் பாலம் நானென்றீர்

காலம் கடந்தும் இருக்கின்றீர்

கருணை வடிவாய் இருக்கின்றீர் (2)

விண்ணின் வாழ்வை மண்ணில் காண

வழி செய்தீர் வரம் தந்தீர் - ஆராதனை ஆராதனை...