♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நீயே என் சொந்தம் -2 இயேசுவே நீயே என் சொந்தம்
வார்த்தையே இறைவா வானகத்தலைவா நீயே என் சொந்தம்
வேதத்தின் அழியா மறைபொருளே என்றும் நீயே என் சொந்தம் (2)
நீயே என் சொந்தம் -4 (2)
1. பாவ இருளகற்ற பாதை திறந்தவரே ...
பாசம் பொழிந்து என்னில் நிலைத்து வாழ்பவரே ... (2)
பகைமை ஒழித்து மன அமைதி தருபவரே ...
பரிவின் சிகரமே பரமன் இயேசுவே...
2. கருணை வடிவிலே காட்சி தருபவரே...
கண்மலையாய் என்னைக் காப்பவரே என்றும் ... (2)
கனிவு கண்கொண்டு காண்பவரே என்றும் ...
காலம் காலமாய் வாழ்பவரே என்றும் ...