தினமொரு வரம் வேண்டும் தீர்க்கமாய் தினம் வேண்டும் தீங்கில்லா உள்ளம் வேண்டும் தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தினமொரு வரம் வேண்டும் தீர்க்கமாய் தினம் வேண்டும்

தீங்கில்லா உள்ளம் வேண்டும்

தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே (2)

கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே


1. கடுகளவு விசுவாசம் தேவை என்று ஓடிவந்தேன்

கரையாத கல்மனமும் கரைந்திடக் காத்திருந்தேன் (2)

இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராகி

குறையில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெறவே

கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே


2. பறவைகள் பகிர்வதுபோல் மரங்கள் கனி தருவது போல்

மேகம் மழை பொழிவதுபோல் நிலவு ஒளி தருவது போல் (2)

இனி இரக்கத்தால் இறைமகனாய் நீதியால் பண்பாளராய்

உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே

கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே