என் நெஞ்ச நாயகா இறைவா என்றும் என் அன்பைப் பலியாக ஏற்பாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் நெஞ்ச நாயகா இறைவா என்றும்

என் அன்பைப் பலியாக ஏற்பாய் (2)

ஏழை என் பலிதனை நீ ஏற்கும் வேளை

என் வாழ்வு அருளன்பில் நிலைபெறுமே


1. காற்றினில் ஆடுகின்ற தீபம் நானுந்தன்

கோவிலில் ஏற்றி வைத்தாய்

சேற்றினில் வாழுகின்ற சிறுமலர் நான் உந்தன்

பூசையில் சேர்த்து விட்டாய்

என்னை உன் நெஞ்சோடு இணைக்கின்றபோது - 2

என் இயேசுவே என்னைத் தருகின்றேன் - என் நெஞ்ச


2. பலிப்பொருள் உன்னிடம் தரும்முன்னே எந்தன்

பகைவரை ஏற்கச் சொன்னாய்

விழியினை இழந்திட்ட மானிடர்க்கு என்னை

ஒளியாய் மாறச் சொன்னாய்

தினந்தோறும் நானுந்தன் பூ முகம் காண - 2

எளியோருக்கே என்னை அளிக்கின்றேன் - என் நெஞ்ச