தந்தாய் தவறு செய்தேன் மன்னித்து என்னை ஏற்றிடுவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தாய் தவறு செய்தேன்

மன்னித்து என்னை ஏற்றிடுவாய் (2)

உனக்கெதிராய் தீவினை புரிந்தேன்

திருத்தி என்னை ஏற்றிடுவாய்


1. உன்னைப் பிரிந்து எங்கோ சென்றேன்

உனது அன்பை மறந்து நின்றேன் (2)

உன்னோடு இருந்திட வேண்டும்

உனக்கென நான் வாழ வேண்டும்


2. உனது செல்வம் அனைத்தும் இழந்து

உலகம் பழிக்க அழிந்து சிதைந்தேன் (2)

உன்னோடு இருந்திட வேண்டி

உனதன்பைத் தேடி வந்தேன்