ஒரு வார்த்தை சொன்னாலே போதும் எந்தன் வாழ்வே ஒளிமயம் ஆகும் வார்த்தை வடிவான தேவன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு வார்த்தை சொன்னாலே போதும்

எந்தன் வாழ்வே ஒளிமயம் ஆகும் (2)

வார்த்தை வடிவான தேவன் - அவர்

வாக்கே நமை ஆளும் வேதம் (2)


1. வல்ல தேவன் வார்த்தை கேட்டு நோயும் பேயும் ஓடியதே

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்

நம்பி வந்த மாந்தருக்கு வார்த்தை மருந்தாய் மாறியதே

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்

உறுதியான வார்த்தை மனம் உருக வைக்கும் வார்த்தை

ஒளியுமான வார்த்தை நிலை வழியைக் காட்டும் வார்த்தை

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்

ஆதிமுன்பும் அந்தம் கடந்தும் வாழும் தேவ வார்த்தை

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்


2. நிலத்தில் புகுந்த நீரைப் போல வளத்தைத் தரும் அந்த வார்த்தையே

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்

நிலையில்லாத மனிதர் வாழ்வில் உரமும் ஆகும் வார்த்தையே

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்

மனுவைக் காக்கும் வார்த்தை மனித உருவம் ஆன வார்த்தை

மனிதம் வளர்க்கும் வார்த்தை நல்ல மனதில் வாழும் வார்த்தை

இயேசு என்னும் நாமம் தன்னில் வாழ்வாய் வாழும் வார்த்தை...