பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே நெஞ்சத்தில் நீங்கிடா நேசனே நித்தமும் காப்பவனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே

நெஞ்சத்தில் நீங்கிடா நேசனே நித்தமும் காப்பவனே

என் பாடலின் ஜீவனே பரமனே என் தேவனே


1. அருளின் சின்னம் என் வாழ்விலே அதுபேசும் ஆனந்தமே

அன்பின் சுவை உருவாகிடும் இன்பத்தின் சுனை நீரது

ஓர் நாளிலே உருவாகிடும் ஊர் எங்குமே அரங்கேறிடும்

உந்தன் அன்பினில் நாளும் வாழ்ந்திடும் அந்த பேரின்பம்

எங்கும் சூழ்ந்திடும் - இன்றும் என்றும் எந்தன் தெய்வம் நீ


2. புவி எங்கிலும் புதுமை பொங்கும் புலரும் நல் புதுவானமே

புல் பாடிடும் புதுப்பாடலின் பூபாளப் பூந்தென்றலே - ஓர் நாளிலே ...