வாழ்வாக நீயாக வேண்டும் இறைவா இறைவா நீயாக நான் மாற வேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழ்வாக நீயாக வேண்டும் இறைவா இறைவா

நீயாக நான் மாற வேண்டும் (இறைவா) -2


1. அலையாய் ஓயாமல் உனைத்தொட வந்தேன்

கனிவாய் எனை நீ அரவணைத்திருந்தாய் (2)

வறண்ட நிலமாக நான் காத்திருந்தேன்

வாழ்வின் மழையாய் இதயம் சேர்ந்தாய்

தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் -2

தேடிவந்தாய் புதுவாழ்வு தந்தாய்


2. இறைவா உன் அன்பு உயிரினும் உயர்ந்தது

உம்புகழ் எந்நாளும் என் நாவில் ஒலிக்கும் (2)

உந்தன் பெயர்சொல்லி என் கரம் உயரும்

நெஞ்சம் நிறையும் உந்தன் விருந்தால் - 2- தாய்தந்தை ... ... ...