சிலுவை நமக்குத் தேவை... “ சிலுவையிலேதான் மீட்சியுண்டு ! தேடும் வானக மாட்சியுண்டு !"

சிலுவை நம்மை தீமைகளிலிருந்தும், தீயோனிடமிருந்தும் நம்மை பாதுகாக்கும் கருவி ! சிலுவை மீட்பின் சின்னம் ! இந்த சிலுவையில்தான் நம் மாபரன் இயேசு விலைமதிப்பில்லாத தன் திருரத்தத்தை அதுவும் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டார். இயேசு ஆண்டவரால் நாம் மீட்பின் பரிபூரண பலனை அனுபவிக்கின்றோம்.

இந்த மீட்பின் சின்னத்தை நம் இல்லங்களில், நம் ஸ்தாபனங்களில் வைக்க வேண்டும். அஞ்சக்கூடாது. சிலர் வீடுகளில் சிலுவை வைக்கக்கூடாது, கஷ்ட்டங்கள் அதிகம் என்று மூட நம்பிக்கையால் நமக்கும், நம் ஆண்டவருக்கும் உள்ள உறவை கேள்விக்குறியாக்குகிறார்கள். மீட்பின் சின்னத்தை வீடுகளில் வைக்ககூடாதா? இது ஏதோ வினோதமாக இருக்கிறது.

நம் அந்தோனியார் “சிலுவை“ அடையாளத்தை வரைந்து பேயை துரத்தினார். அவர் மட்டுமல்ல நம் சவேரியார், சிலுவை அருளப்பர், புனித குழந்தை இயேசுவின் தெரசம்மாள், போன்ற பல புனிதர்கள், புனிதைகள் சொருபங்களைப் பார்த்தால் சிலுவையின் மகிமை புரியும் ஏனென்றால் அவர்கள் கரங்களில் தாங்கி நிற்பார்கள், சில புனிதர்கள் தங்கள் மார்போடு சிலுவையை அனைத்துக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் சிலுவை இல்லாமல் புனிதம் இல்லை. அதை அவர்கள் கண்டுகொண்டதால்தான் சிலுவையைவிட்டு ஒரு நிமிடம் கூட பிரியமாட்டார்கள்.

நாம் பக்தியோடு சிலுவை அடையாளம் வரைந்தால் 50 நாட்கள் பரிபூரன பலனை நம் தாய்திருச்சபை தந்துள்ளது. அதுவும் துறவிகள், துறவரசபையினர் தவம் செய்து பெற்ற பரிபூரண பலனை நாம் பக்தியுடன் பாவமில்லாமல் வரையும் சிலுவை அடையாளத்தால் பெறலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் நாம் கொட்டாவி விடும்போது கூட நம்மை சிலுவை அடையாளம் வரைய வைத்துள்ளார்கள்.

ஆகையால் மீட்பின் அடையாளமான சிலுவைவை துணிச்சலாக பெரிதாக தாரளமாக நம் இல்லங்களில் வைக்கலாம். அதைப்பார்த்தால் அலகை நம் இல்லங்களில் நுழையமாட்டான்.

இன்னொரு சிலுவை நமக்கு அன்றாடம் வரும் துன்பச்சிலுவைகள். அதை நாம் மகிழ்ச்சியுடன் ஏன்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இயேசு சுவாமியே சொல்கிறார் இடுக்கான வழிகளில் நுழைபவன்தான் விண்ணரசில் நுழைவான். மேலும் சொல்கிறார்,

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும் “ லூக்காஸ் 9 : 23

“ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது “ லூக்காஸ் 14 : 27

சிலுவை இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. நம் துன்பச்சிலுவைகள் இயேசு சுவாமியை அடையாளம் காட்டும். இயேசுவை புரிந்துகொள்ள உதவும்; அவரை தேடச்சொல்லும்; அவரை நேசிக்க வைக்கும். நம் பாவத்திற்கு பரிகாரமாக நமக்கு வரும் சிலுவைகளை ஒப்புக்கொடுக்க வைக்கும், நம் வாழ்வில் நாம் அன்றாடம் சின்ன சின்ன சிலுவைகளை சுமப்பதால் நம்மை சுமப்பவருக்கு சின்ன சின்ன அன்பு காணிக்கைகளை கொடுக்க முடியும்.

சில சிலுவைகள் மனிதர்கள் உருவில் வரலாம். சில பிரச்சனைகள் உருவில் வரலாம். அசவுகரீக உருவில் வரலாம். நோய்கள் உருவில் வரலாம் (வைத்தியம் செய்துகொண்டே சுமக்கலாம்) மழை, வெயில், மின்வெட்டு, பஸ் ரயில் பயனம், உடல் வலி, வறுமை, கஷ்ட்டங்கள் எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாம்.

ஆகையால் நமக்கு வரும் துன்பங்களை கண்டு கவலைப் படக்கூடாது கலங்க கூடாது. அவருக்குத்தெறியும் நம் தாங்கும் திறன் அதற்கு மேல் அவர் கொடுக்கமாட்டார்.

அவற்றை நமக்கே புண்ணியமாக மாற்றி தருவார். எப்படிப்பார்த்தாலும் சிலுவை நமக்கு நல்லது மற்றும் தேவையானது. ஆகையால் சிலுவையை, சிலுவைகளை நேசிப்போம்; விண்ணகத்திற்கு நம் டிக்கெட்டை ரிசர்வ் செய்வோம். ஏனென்றால்,

"சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு"

இயேசுவின் இரத்தம் ஜெயம் !

இயேசுவுக்கே ! புகழ் மரியாயே வாழ்க !