என்னோடு வாழ என்னோடு தங்க என் ஆயனே நீ என்னுள்ளம் வாரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னோடு வாழ என்னோடு தங்க

என் ஆயனே நீ என்னுள்ளம் வாரும் (2)

என் வாழ்வின் விருந்தாக என் ஆன்ம உணவாக -2

என் அன்பு தேவா என் உள்ளம் நீ வா


1. வான் பிரிந்து வந்து எம் வாழ்வான அன்பே

உனைப் பிளந்து தந்து எம் உயிரான உணவே (2)

வழியாக ஒளியாக வாழ்வான இறைவா

பரிவாக கனிவாக வாராயோ என் தலைவா (2)

உன் பந்தி அமர உன் அன்பில் வாழ

உணவான இறைவா உறவாக நீ வா


2. உறவாக துணையாக எமைத் தாங்க வந்தாய்

உளம் தாழ்த்தி எமைத் தேற்ற பலியாகிச் சென்றாய் (2)

கரம் பொறித்து எமைக் காக்கும் அன்பென்றும் வேண்டும்

உளம் பதித்து உமைப்போற்றும் பண்பென்றும் வேண்டும் (2)

உன் பந்தி அமர உன் அன்பில் வாழ

உணவான இறைவா உறவாக நீ வா