என்னோடு நீ பேச வா என் நெஞ்ச நாயகனே புதிய பூமி புலரவே தலைவனே வழியாய் வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னோடு நீ பேச வா என் நெஞ்ச நாயகனே

புதிய பூமி புலரவே தலைவனே வழியாய் வா


1. இதயம் திறந்து இமைகள் மூடி

உனக்காய்த்தானே காத்திருந்தேன் (2)

அமுதம் பருகும் ஆசை கொண்டு

வார்த்தைக்காக தவமிருந்தேன்

நம்பிக்கை ஜோதியே எழுந்து வா

என் ஆத்ம தாகம் போக்க வா

மனிதன் வாழ மன்னா பொழிந்த மன்னவனே விரைந்து வா

வா வா என்னில் வா என்னுயிராய் மெய்யாக வா


2. மழையின் மேகம் நல்லோர் தீயோர்

வேற்றுமையோடு பொழிவதில்லை (2)

உந்தன் அன்பை நானும் காண

சிலுவைத் தியாகம் செய்தவரே

இருளில் வாழ்ந்திடும் மாந்தர்கள்

ஒளியைக் காண எழுந்து வா - மனிதன் வாழ... ...