இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது

காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது


1. மணமில்லாத மலரை போல் இசையில்லாத பறவைப் போல் (2)

அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே - 2

துள்ளி மகிழும் குழந்தையே உள்ளம் கொள்ளை கொண்டதே (2)

உந்தன் அன்பின் வரவிலே

விண்ணும் மண்ணும் இணைந்ததே - 2


2. தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி - 2

சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே - 2