தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே என்றம் அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே என்றம்

அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே

உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே - 2 என்

இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே

தரிசனம் தா உந்தன் தரிசனம் தா -2


1. மடிநிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய பகை இருந்தால்

மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ ...

வழிகளிலே ஒளி இருந்தும் விழிகளிலே இருள் இருந்தால்

வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே

நீதியில் நாம் வாழ்ந்தால் வீதியில் வேதம் வரும்

சாதிகள் நாம் ஒழித்தால் சமத்துவத் தென்றல் வரும்

ஒரு முறைதான் பூக்கும் வாழ்வில் மணம் பரப்புவோம்

நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்

அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்


2. தர்மங்களும் நியாயங்களும் அனைவருக்கும் சமமானால்

வானம் என்னும் கூரையின்கீழ் வறுமையும் ஏனோ ஆ...

சுயநலத்தில் அயலவரின் சுதந்திரத்தை மறுக்கின்றோம்

வன்முறையால் நாட்டில் அமைதி குலைக்கிறோம்

மதவெறி நாம் மறப்போம் மனிதரை நாம் நினைப்போம்

உயிர்களை நாம் மதிப்போம் உறவுகள் தினம் வளர்ப்போம்

திசைகள் எங்கும் பிரிவினையின் சுவர்கள் உடைப்போம்

நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்

அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்