உறவான உயிரே என் இயேசுவே உயிராக உறவாக எனில் வாருமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உறவான உயிரே என் இயேசுவே

உயிராக உறவாக எனில் வாருமே (2)

வேளையினைத் தெரிந்து வேண்டும் வரம் செய்வாய்

தாயாக மார்போடு அரவணைப்பாய்


1. வழிகாட்டும் தந்தை அவரே அன்பூட்டும் தாயும் அவரே

உடன்நடக்கும் தலைவர் அவரே

உண்மை பகிரும் தோழன் அவரே

துணையாகவே மனுவானவர்

பணிவாழ்வினில் இரையானவர் (2)


2. உயிரூட்டும் நெறியும் அவரே வளம் சேர்க்கும் நதியும் அவரே

துயர் துடைக்கும் அருளும் அவரே

பகைமை போக்கும் கருணை அவரே - துணையாகவே ...