புது நாளாம் புனித நாளாம் திருநாளாம் பிறந்தநாளாம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புது நாளாம் புனித நாளாம் 

திருநாளாம் பிறந்தநாளாம் (2)

இனி கவலைகள் ஏதும் இல்லை

மனக்கலக்கமும் தேவையில்லை (2)


1. ஆயிரம் ஆண்டுகளாய்க் காத்திட வைத்ததும் ஏனோ

கவலைகள் களைந்திடத் தானோ (2)

பாதை தேடி அலைந்தோம் உம் பாதம் வந்து அமர்ந்தோம் (2)

வாழ்வும் வழியுமானாய்


2. அமைதியின் அருளுருவாய் எம் இதயங்கள் நுழைந்தாய் ஏனோ

மன நிம்மதி வழங்கிடத்தானோ (2)

நீ பிறந்த மண்ணின் வாசம் எங்கள் மனதில் என்றும் வீசும் (2)

என்றும் யாவுமானாய்