பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம் நீங்கிப்போகும் பரமன் இயேசு பார்வையினாலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம் நீங்கிப்போகும்

பரமன் இயேசு பார்வையினாலே

நெஞ்சமெல்லாம் இனிமையாகும் நினைத்ததெல்லாம் நிறைவேறும்

நம் இயேசு வார்த்தையினாலே - நம் தேவன் நல்லவரே -2


1. ஆண்டவரை மனதில் வைத்து

அனைத்தையும் நாம் செய்யும்போது

பாதைகளை அவர் செம்மையாக்குவார் (2)

அவரை நோக்கி பார்த்தவர்கள் அவமானம் அடைவதில்லை -2

ஆயிரமாய் ஆசி பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்


2. திராட்சை செடி கிளையைப் போல

இயேசுவோடு இணைந்திருப்போம்

பலன் தருவோம் நலன்கள் பெறுவோம் (2)

என்ன குறை இருந்தாலும் அவரோடு நாமிருந்தால் -2

எல்லாமே நிறைவாகுமே நம் வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே